1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

92 சதவீதமான சுகாதார துவாய்கள் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவற்றிற்கு வரி அறவிடப்படுவதில்லையெனவும் நிதி

இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

தல்துவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் எஞ்சிய எட்டு வீதமான பொருட்களை உற்பத்திப் பொருட்களாக ஒரு நிறுவனம் இலங்கைக்கு கொண்டுவருவதாகவும் அதற்கு 22.5% வரியே

அத்துடன் உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காகவே அந்த வரித் தொகை அறவிடப்படுவதாகவும் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுமார் 40 வீதமான பெண்கள் சுகாதார துவாய்கள் பாவனையை இடைநிறுத்தியுள்ளதாக எட்வகாட்டா என்ற அமைப்பு அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கையில் 15 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களில் 40 வீதமானவர்கள் சுகாதார துவாய்கள் பாவனையை நிறுத்தியுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி