1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதித் தேர்தலை உரிய காலப்பகுதியில் அறிவித்துவிட்டு அதேகாலப்பகுதியில் பாராளுமன்ற கூட்டத்தொடரை சிலகாலத்துக்கு

ஒத்திவைக்க ஆளுங்கட்சியின் மேல்மட்டத்தில் ஆராயப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது.

பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லும்போது ஜனாதிபதியின் முழு அதிகாரத்துக்குட்பட்ட வகையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறும் என்பதால் மேற்கண்டவாறு ஆராயப்பட்டுள்ளதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாராளுமன்ற கூட்டத்தொடரை தொடர்ச்சியாக அடுத்தடுத்து எவ்வளவு காலத்துக்கு ஒத்திவைக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச சட்டவாதிகள் சிலரிடம் ஆலோசனை பெற்றுள்ளதாகவும் தெரியவந்தது.

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிக் கப்பட்டுள்ள நிலையில், அரச மேல்மட்டத்தில் இவ்வாறு ஆராயப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி - தமிழன் பத்திரிகை

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி