1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்றி பொய்களை கூறி அவர்களை காணாமல் போனவர்களிற்கான

அலுவலகத்திற்கு அழைத்து பதிவுகளை மேற்கொள்ளும் செயற்பாடு தற்போது இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (13) இடம்பெற்றது.

பொதுக்கூட்டம் நிறைவில் ஊடகங்கங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி சிவானந்தன் ஜெனிற்றா இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தின் ஊடாக உறவுகளை அங்கு அழைத்து அவர்களுக்கான மரணச் சான்றிதலுக்கான பதிவுகளை மேற்கொள்ளுகின்றனர்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக சான்றிதலும் எமக்கு வேண்டாம் எனவும் தெரிவித்து வருகின்றோம். ஆனால் காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினர் உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி கட்டாயம் பதிவு செய்யுங்கள் பதிவு செய்யப்பட்டால் மாத்திரமே நீங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற பதிவு இருக்கும், இல்லாவிடில் பதிவு இருக்காது எனவும் முச்சக்கரவண்டிக்கு நாங்கள் பணம் தருகின்றோம் வாருங்கள் என கட்டாயப்படுத்துகின்றனர்.

இவ்வாறு மிகக்கேவலமான செயற்பாட்டினை தான் காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினர் செய்து வருகின்றனர்.எனவே, காணாமல் போனவர்களிற்கான அலுவலகத்தினை நாம் ஆரம்ப கட்டத்திலேயே முற்றும் முழுதாக மறுத்திருந்தோம். அவர்கள் மக்களை ஏமாற்றி பொய்களை கூறி அவர்களிடம் பதிவுகளை மேற்கொள்கின்றனர். எனவே சர்வதேச நாடுகள் இதற்கு அனுசரனை வழங்காது எமக்கான சர்வதேச நீதியினை பெற்றுத்தர வேண்டும்

தமிழ் மக்கள் அறவழியில் பேராடுகின்ற ஒவ்வொரு போராட்டங்களையும் நசுக்குகின்ற முகமாக தடையுத்தரவுகளை விதித்து மிகவும் சட்டவிரோதமான கைதுகளை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். கைது இடம்பெறுவதை பார்க்கின்ற போது உண்மையாகவே அவர்கள் செய்யாத குற்றத்திற்கு குற்றங்கள் செய்ததாக எழுதி பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் ஆயர்படுத்துகின்றனர்.

நான் கூட பொலிஸ் உத்தியோகத்தருக்கு அடிக்கவே இல்லை பொலிஸ் உத்தியோகத்தர் எனது கையை உடைக்க முற்பட்ட சமயத்தில் பொலிஸாரை தள்ளிவிட்டேன் தவிர அவர்களை அடிக்கவில்லை ஆனால் பொலிஸார் எழுதியுள்ளனர் நான் பொலிஸாருக்கு அடித்ததாக அப்படியான பொய் குற்றச்சாட்டுக்களை பொலிஸார் மேற்கொள்கின்றனர். எட்டு நாட்கள் நான் சிறையில் இருந்தேன் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன. எனது கையடக்க தொலைபேசியினை விசாரணைக்கு உட்படுத்தவதாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் சிவராத்திரிக்கு வழிபாட உரிமையில்லை என்றால் பாதுகாப்பு பிரிவினர் அவர்களை அடாவடியாக தாக்கி சாப்பாத்து கால்களுடன் ஆலயத்தினுள் சென்று அபிசேக பொருட்களை கால்களால் தட்டுகின்ற அடாவடி செயற்பாடு இங்கு இடம்பெறுகின்றது.

அதுமட்டுமின்றி 8 பேரை குற்றமின்றி கைது செய்துள்ளனர். ஆலயத்தினை வழிபட கூட இங்கு உரிமையில்லை அவர்களின் உறவினர்கள் தெருவில் நின்று அழுகின்றனர். இந்த நாட்டில் வாழ உரிமையில்லை நில உரிமை , ஆலய வழிபாடு உரிமை , ஜனநாயக போராட்ட உரிமை எவையும் இல்லை. ஆட்சிகள் மாறுகின்றன ஆட்கள் மாறுகின்றன புதிய சட்டங்கள் வருகின்றன. எப்படி எம்மை அடக்க முடியுமே அப்படி எம்மை அடக்குகின்றனர். எமது குரல்கள் ஒங்காத வண்ணம் தமிழர்களை அடிமைத்தனமாக வைத்திருக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி