1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வவுனியா - வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில்  கடந்த 8 ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜையில் வைத்து கைது

செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 8 பேரில் 5 பேர் நேற்றையதினம் முதல் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆலயத்துக்குள் நுழைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வழிபாட்டில் ஈடுபட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.

நேற்றையதினம் காலை 9 மணி முதல் மூன்று தடவைகள் குறித்த வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந் நிலையில், தொல்பொருள் திணைக்களத்தினர் அங்குள்ள தொல்பொருள் சின்னங்களைச் சந்தேகநபர்கள் சேதப்படுத்தினர் என்று மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இதனையடுத்து மேற்படி சந்தேகநபர்கள் 8 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந் நிலையில் குறித்த 8 பேரில், கிந்துஜன், தவபாலன், மதிமுகராசா ஐயா, தமிழச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகிய ஐந்து பேரும் நேற்றையதினம் காலையிலிருந்து உணவின்றி பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரி, வவுனியாவில் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை முன்னெடுக்க ஒன்றிணையுமாறு நல்லூர் சிவகுரு ஆதீன கர்த்தா தவத்திரு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி