1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட எட்டுப் பேரின் விடுதலையை

வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டுப் பேர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருவதுடன் அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அவர்களின் விடுதலை தொடர்பில், கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் , தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்த கலந்துரையாடல் இன்றையதினம் (16) யாழிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்றது.

இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன்,செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி