1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் சுமார் 05 மணித்தியாலங்கள் நடத்தப்பட்ட

விசாரணைகளின் பின்னர், அவர் அங்கிருந்து வெளியேறியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விசாரணைக்கு பின்னர் பிரதான நுழைவாய் ஊடாக அன்றி, பிறிதொரு வாயில் வழியே அவர் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு காலை 10.30 மணிக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவிடம், சுமார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகளை தனக்கு தெரியும் என கடந்த சில தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, அவர் மீது உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, இன்றையதினம் மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதனால், அப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரினால் பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி