1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்வேறு காரணங்களால் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிய சுமார் 90 சதவீதமான கட்சி உறுப்பினர்கள் மீண்டும்   கட்சியில்

இணைந்துகொள்ளத் தயாராக இருப்பதாக, முன்னாள் நிதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அக்கட்சியினர் மற்றும் உழைக்கும் மக்களுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி உலக தொழிலாளர் தினத்தில் மக்களின் சக்தியை நாட்டுக்கு காண்பிக்கும் என அவர் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து குறிப்பிட்ட அவர், “குறுகிய அரசியல் மற்றும் அதிகார நோக்கங்களுக்காக காளான்கள் போல் உருவாகும் அரசியல் கூட்டணிகளினால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்த நன்மையும் இல்லை” என்றார்.

“இவ்வாறான அரசியல் கூட்டணிகள் உருவாகும் வேகத்தை விட வேகமாக சரிந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதெல்லாம் பலமாகவும், அதிகாரத்துடனும் இருந்ததோ அப்போதெல்லாம் நாடு அபிவிருத்தியடைந்தது.

“அந்தக் கட்சி பலவீனமான போதெல்லாம் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது” என்று, ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி