1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையின் பல பகுதிளில் ஷவ்வால மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இன்று 'ஈதுல் பித்ர்' நோன்புப்

பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப்பிறை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர்.

புனித ஷவ்வால் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு, ரமழான் மாதத்தின் 29ஆம் நாளான நேற்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து, கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற பிறைக்குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் ஒரு சில இடங்களில் பிறை தென்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், பிறை காணப்பட்ட விடயத்தை உறுதிப்படுத்த சில மணித்தியாலங்கள் சென்ற நிலையில் மிக நீண்ட ஆலோசனை மற்றும் கலந்துரையாடல்களின் பின்னர் பிறைக் குழுவினால் ஏகமனதாக குறித்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பிறை தீர்மானிக்கும் இந்த மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், இலங்கை வக்பு சபை, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள அதிகாரிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் பிறைக் குழு உறுப்பினர்கள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி