1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்வதென, க.வி.விக்னேஸ்வரனின் ஏற்பாட்டில் நடந்த

கூட்டத்தில் கூடிய சிலர் நேற்று (12) தீர்மானித்துள்ளனர்.

தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நியமிப்பது என்று மாத்திரமே தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், சிவில் சமூகம் என்ற பெயரில் ஆங்காங்கே உள்ள சில தனிநபர்கள், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஓரிருவர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் பொது வேட்பாளர் கோசத்தின் பின்னணியில் சிங்கள தரப்பொன்று உள்ளது, பலனற்ற நடவடிக்கையென்ற பரவலான சந்தேகங்களும், விமர்சனங்களும் உள்ள நிலையில், இன்று சிலர் கூடி இந்த முடிவை எடுத்தனர்.

சிவில் சமூகமென்ற பெயரில் இயங்குபவர்களை அழைத்து, பொதுக்குழுவொன்றை அமைத்து, அந்த குழுவின் மூலம் பொதுவேட்பாளரை இறுதி செய்வதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

சிவில் சமூகமென்ற பெயரில் இயங்குபவர்களை அழைத்து, பொதுக்குழுவொன்றை அமைத்து, அந்த குழுவின் மூலம் பொதுவேட்பாளரை இறுதி செய்வதென இன்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும், இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில், நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் மாத்திரமே மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி