1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

காணி அனுமதிப்பத்திரம் மற்றும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளில்  பூரண

உரிமை வழங்குவதற்காக ஜனாதிபதி பெரும் விளம்பரத்துடன் "மரபுரிமை வேலைத்திட்டத்தை" ஆரம்பித்து வைத்த வேளையில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களின் பத்திரப்பதிவு செய்யப்பட்ட மூதாதையரின் காணியை அரசாங்க நிறுவனம் ஒன்று இரகசியமாக கையகப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வன்னி தேசிய வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு சேதங்களையும் அழிவுகளையும் ஏற்படுத்திய வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தாம் பாரம்பரியமாக பயிரிட்டு வந்த காணியை வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தியதாக தெரிவித்தார். வர்த்தமானி அறிவித்தல் மூலம், தற்போது தனக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார்.


JL 2

83 வரை விவசாயம் செய்தோம். அதன் பின்னர் அங்கு செல்ல முடியவில்லை. பின்னர் 2010 மற்றும் 2012 க்கு இடையில் மீள்குடியேற்றம் செய்து நிலத்தை துப்பரவு செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தோம்.


வனஜீவராசிகள் திணைக்களம் 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்தக் காணிகள் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமானவை என அறிவித்தது. பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டது” என்றார்.

வடக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 80களின் முற்பகுதியில் தமது கிராம நிலங்களை விட்டு வெளியேறிய கரியல்வயல் கிராமத்தின் 130 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குடியேறி பின்னர் யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமது சொந்த கிராம நிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.

JL
இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனஜீவராசிகள் திணைக்களம் இந்தக் காணிகளை வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமானவை என அறிவித்தது,

பின்னர் குறித்த கிராம மக்கள் மீது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

JL 1

இதேவேளை,வனஜீவராசிகள் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 130 பேரில் 100க்கும் அதிகமானோர் தமது காணிக்கான உறுதிப்பத்திரங்களை வைத்துள்ளனர் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் மே 02ஆம் திகதி நீதிமன்றில் தோன்றிய சட்டத்தரணி வி.எஸ்.தனஞ்ஜெயன், நீதிமன்ற அமர்வுக்குப் பின்னர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி