1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றவாளி என தவறாகக்  கருதி இலங்கையர் ஒருவரை தாக்கியதற்காக

மெட்ரோ பொலிட்டன் பொலிஸ்  அதிகாரி ஒருவருக்கு 12 வார கால  பணி இடைநிறுத்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2022 இல், கிழக்கு லண்டனில் உள்ள ரோம்ஃபோர்டில் உள்ள ஒரு கிளினிக்கின் பெயர்ப் பலகையை ஒருவர்  சேதப்படுத்தியதாக  கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்  பேரில் மெட்ரோ பொலிட்டன் பொலிஸ் அதிகாரி  ஜொனாதன் மார்ஷ் நடவடிக்கை எடுத்தார்.

இதனையடுத்து  ரசிக அத்தநாயக்கவை என்ற இலங்கையரை  தாக்கி அவரைக் கைது செய்துள்ளார்.  மருத்துவ ஊழியரான அத்தநாயக்கவை கைவிலங்கிட்டே அவர் அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் தான் செய்தமை தவறானது என்பதனை  உணரந்த அந்த  பொலிஸ் அதிகாரி அவரை விடுவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததனையடுத்து  மெட்ரோ பொலிட்டன் பொலிஸ்  அதிகாரி  குற்றவாளியாகக் காணப்பட்டு  12 வார காலத்துக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன்  150 மணிநேரம் ஊதியம் இல்லாமல் வேலை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.  அத்துடன் இழப்பீடாக 1,500 பவுண்களையும்  வழங்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.

நீதிவான் இது தொடர்பில் தெரிவிக்கையில்,  அன்னாபெல் பில்லிங் மார்ஷின் செயல்களை "வெறுக்கத்தக்கது மற்றும் அநீதியானது" என்று விபரித்த நீதிவான்  மார்ஷுக்கு முந்தைய தண்டனைகள் எதுவும் இல்லை என்றும் அவரது குணாதிசயத்துக்கு  நல்ல  பெயர் உள்ளதாகவும் கூறினார்.

"ஒரு பொலிஸ் அதிகாரியாக நீங்கள் கணிசமான பொறுப்பில் இருந்தீர்கள். ஆனால் இது போன்ற உங்கள் செயல்கள் பொலிஸ்துறை  மீதான நம்பிக்கையையும் அபிமானத்தையும் குறைக்கின்றன. யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை' என்றும் நீதிவான் தெரிவித்தார்.

 விசாரணைக்குப் பின்னர் பேசிய இலங்கையைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அத்தநாயக்க, இந்தத் தாக்குதல் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்துள்ளது என்றார்.

rasika attanayaka

'நான் ஒரு பந்து வீச்சாளராக கிரிக்கெட் விளையாடுவேன்,  ஆனால் எனது தோள்பட்டை பிரச்சினையால் என்னால் விளையாட முடியவில்லை.  

'நான் ஐக்கிய இராஜ்ஜியத்தில் வாழ்ந்த காலம் முழுவதும் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக இருந்தேன்."

என்னைத் தாக்கி கைது செய்த பொலிஸ் அதிகாரி மன்னிப்பு கேட்கவில்லை என்றும், இந்த சம்பவம் "தவறாக புரிந்து கொள்ளப்பட்ட அடையாளம்" என்று அவர்கள் கூறியதாகவும்  அத்தநாயக்க கூறினார். 

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி