இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் கொடுப்பனவை 100 சத
வீதத்தால் அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
ஒவ்வொரு வீரரின் வருடாந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய போட்டிக் கட்டணம் அதிகரிக்கப்படும் எனவும், இந்த கட்டண அதிகரிப்புடன், ஒரு டெஸ்ட் போட்டிக்காக ஒரு வீரருக்கு 15,000 அமெரிக்க டொலர்கள் அல்லது சுமார் 44 இலட்சம் ரூபா கிடைக்கும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.