1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நால்வரில் தம்மிக்க பெரேரா மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசத்திடம் கேட்ட போது, ​​ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் அவசரமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் மற்றுமொரு சந்திப்பு நேற்று (9) இடம்பெற்றுள்ளது.

இருவருக்கும் இடையே நடந்த ஆறாவது சந்திப்பு இதுவாகும்.

மேலும், ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதமாவதாக அக்கட்சியின் பல எம்.பி.க்கள் கடந்த வாரம் அதன் தலைமையிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அது உண்மை என்பதை பசில் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி