1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு வாய்ப்பைப் பெற்றுக் கொண்டு சுமார்

10 இலட்சம் ரூபாவை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரூபவாஹிக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ரூபவாஹிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்கவிடம் தெரிவிக்கையில், ​​டயனா கமகேவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

நிலுவைத் தொகையை வழங்குமாறு டயானா கமகேவுக்கு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவர் அதனை செலுத்தத் தவறியதாகவும் தலைவர் தெரிவித்துள்ளார்.

நவகமுவ பெரஹராவை நேரடியாக ஒளிபரப்புவதற்காகவே அவர் இந்த ஒளிபரப்பை பெற்றுக்கொண்டதாகவும், அதற்கான அனைத்து பணத்தையும் தனிப்பட்ட ரீதியில் செலுத்துவதாகவும் எழுத்து மூலமான ஆவணத்தை சமர்ப்பிப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி