1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை விடுத்தால் தற்போது ரஷ்யா மற்றும் உக்ரைனில்

கூலிப்படையாக பணிபுரியும் இலங்கை இராணுவத்தினரை ஒரு வாரத்துக்குள்  நாட்டுக்குள்  அழைத்து வர முடியும் என  ரஷ்யாவின் இலங்கைக்கான முன்னாள் தூதுவர்  உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அரசாங்கத்துடன் கலந்துரையாடி ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய பிரச்சினையாக இருந்தாலும்  தற்போதைய இராஜதந்திரிகளால் அவ்வாறு செய்ய முடியாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று (மே 12) மத்தள விமான நிலைய வளாகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"போரின்   முன் வலயத்தில் சுமார் 1,500 வெளிநாட்டினர் கொண்ட கூலிப்படை இருப்பதாக உக்ரைனின் தூதர் என்னிடம் கூறினார். இவர்களில் இலங்கை இராணுவ வீரர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.  

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் என்ற வகையில் அரசாங்கம் என்னிடம் ஏதேனும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் இந்த இராணுவ வீரர்களை ஒரு வார காலத்துக்குள்  இந்த நாட்டுக்கு அழைத்து வரும் திறன் எனக்கு உள்ளது. ரஷ்ய அரசாங்கத்துடன் மத்தியஸ்தம் செய்வதன் மூலம் இந்த பிரச்சினையை ஒரு நாளில் தீர்க்க முடியும் அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி