1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ரஷ்ய - உக்ரைன் போரில் ஈடுபட சட்டவிரோதமாகச் சென்ற

16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் இதுவரை 288 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்ய உக்ரைன் போருக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்பில் ரஷ்ய தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

“நேற்று மாலை ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்தேன். அவரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். ஒரு கோரிக்கை, போர் முனையில் கூலிப்படையாக பணியாற்றிவரும் போர் வீரர்களின் பட்டியலை எங்களிடம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அங்குள்ள போர்வீரர்களை அழைத்துவர தலையீடு செய்ய முடியும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி