1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இணையதளங்கள் மூலம் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது

அதிகரித்துள்ளமை தொடர்பில் அமெரிக்க அமைப்பு ஒன்று இலங்கைக்குக்கு அறிவித்துள்ளது.

அதன் அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்துக்குச் சென்று பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் இது தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துகிறது எனவும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், இணையத்தில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பாக 55 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன.

பெற்றோரின் பராமரிப்பில் வளரும் பிள்ளைகள் சமூகத்தில் வெளிப்படும்போது படிப்படியாக கைத்தொலைபேசி மற்றும் இணைய நடவடிக்கைகளுக்கு திரும்புகின்றனர்.

இணையதளத்தில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களால் இது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இணையம் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளில் நிர்வாண புகைப்படங்களைப் பயன்படுத்தி சிறுவர்களை அச்சுறுத்துவது மற்றும் செல்வாக்கு செலுத்துவது தொடர்பில் 2023 ஆம் ஆண்டில் 150 முறைப்பாடுகளும் இந்த வருடம் ஏப்ரல் 31 ஆம் திகதி வரை 55 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

2021, 22 மற்றும் 23 ஆம் ஆண்டுகளில் துஷ்பிரயோகத்துக்காக சிறுவர்களை இணையதளங்களில் கோருவது 300 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அமெரிக்க ஏஜென்சியான காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையம் வெளிப்படுத்துகிறது.

இலங்கையில் வயது குறைந்த சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை உருவாக்கி இணையத்தில் வெளியிட சில குழுக்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, சிறுவர்களை கவர்ந்திழுக்க மிகவும் பொதுவான முறைகள் பாலியல் உரையாடல்களில் ஈடுபடுவது, குழந்தைகளின் பாலியல் புகைப்படங்களை கோருவது அல்லது பகிர்வது, அநாகரீகமான புகைப்படங்களை விநியோகித்தல் மற்றும் பரிசுகள், மருந்துகள், போக்குவரத்து, உணவு போன்றவை என தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் காட்டப்படும் சில நடத்தைகள் மயக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன என்றும் அதனால் பாலியல் துஷ்பிரயோகத்ததுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூறுகிறது.

அப்படியானால், சமூக வலைப்பின்னல்கள் மற்றும் இணையத்தில் உங்கள் பிள்ளைகள் இத்தகைய துஷ்பிரயோகங்களில் இருந்து எவ்வாறு தடுக்க முடியும்?

இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிக்கையில்

"பிள்ளைகள் 16 வயதை அடையும் வரை தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி