1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின்  பொருட்களைக்

கொண்டு செல்லும் போர்ட்டர் ஒருவரைத்  தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி காலை இராஜாங்க அமைச்சர் தனது மனைவி மற்றும் அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தனது மனைவியை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்காக  கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

விமான நிலையத்தின் பிரதான வாயிலிலிருந்து துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களுடன் இராஜாங்க அமைச்சர் உள்ளே நுழைய முற்பட்டபோது துப்பாக்கியுடன் நுழைய அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்  இராஜாங்க  அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளை இராஜாங்க அமைச்சர் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பிரசன்ன ரணவீர தனது மனைவியின் பொருட்களை எடுத்துச் சென்ற போர்ட்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

தனக்கு தரவேண்டிய ஆயிரம் ரூபாவுக்கு பதிலாக 700 ரூபாயை வழங்குவதற்கு போர்ட்டர் எதிர்ப்புத் தெரிவித்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் சேவை வழங்கும் போர்ட்டருக்கு ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என விளம்பர பலகையில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே  போர்ட்டரை காதில் அறைந்து விட்டு இராஜாங்க விமான நிலைய வளாகத்தை விட்டு வெளியேறினார்.

இந்த சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர கூறும்போது, ​​''அப்போது நான் கோபமடைந்தேன். நான் அவரைக் கூப்பிட்டு காதில் அறைந்தேன்."

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி