1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு சந்தேக நபர்களை விடுதலை செய்

து கம்பஹா மேல் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

கம்பஹா ரத்துபஸ்வல பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் குடிநீர் மாசடைந்துள்ளதாகக் கூறி, 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அப்பகுதி மக்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுத்தருமாறு கோரி வெலிவேரிய பகுதியில் போராட்டம் நடத்தினர்.

அங்கு போராட்டக்காரர்களை கலைக்க ராணுவ அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  மூவர் சுடடுக் கொலப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனையடுத்து இராணுவ பிரிகேடியர் உட்பட நான்கு இராணுவ வீரர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா மேல் நீதிமன்றில் 94 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி