1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரஜாவுரிமை இன்றி இலங்கை கடவுச்சீட்டுகளைப் பெற்றமை தொடர்பில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கையை நீதிமன்றில் முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளின் பகுப்பாய்வுகளின் போது, ​​குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் டயனகமகேவை சந்தேக நபராக பெயரிடுவதற்கு போதிய சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய அவரை சந்தேக நபராக பெயரிட அனுமதிக்குமாறும் கோரினர்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி