1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்க்ஷவையும்

பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமித்தது சட்டவிரோதமானது என நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை நிராகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு இன்று (22) மேல் மாாகண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மூன்றாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவினால் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிஹான் குலதுங்க மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற சிவில் மேன்முறையீட்டு அமர்வு முன்னிலையில் இந்த மனு மீண்டும் கூடியது.

பிரதிவாதி துமிந்த திஸாநாயக்க சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர தனது தரப்பு நியாயங்களை இங்கு முன்வைத்தார்.

இதனையடுத்து இந்த விசாரணைகள் இமட்மாதம் 31 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி