1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொலன்னறுவை தேசிய  பூங்காவின்

ஹந்தபன்வில வில்லுவ ஓடைக் கால்வாய் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த காட்டு யானைகளின் ஏழு சடலங்கள் இன்று (26) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.   

உயிரிழந்த காட்டு யானைகளில் 8, 9, 10 வயதுடைய ஐந்து இளம் யானைகளும், 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு காட்டு யானைகளும் அடங்குகின்றன.
 
ஹந்தபன்வில ஏரியின் ஓடை கால்வாய் பகுதியில் பல்வேறு செடிகள் நிரம்பியுள்ள  ஓடை கால்வாயில் பல இடங்களில் யானைகளின் 7 உடல்கள் சிதைந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும்  விசாரணைகளை மேற்கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குறித்த ஓடை கால்வாய் ஊடாக மகாவலி ஆற்றில் நீர் பாய்ந்ததுடன், ஓடையை கடக்கும்போது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் இத்த காட்டுயானைகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
பொலன்னறுவை வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எல்.பி. எதிரிசிங்க தெரிவிக்கையில், உயிரிழந்த ஏழு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கு உரிய கால்நடை வைத்தியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி