1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் சுற்றாடல் அமைச்சரும் தற்போதைய வடமேல்

மாகாண ஆளுநருமான ஹாபிஸ் நஸீர் அஹமதின் முயற்சியினால் காத்தான்குடியில் சுமார் 40 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் 8.25 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பட் வீதிகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

உலக வங்கியின் நிதி அளிப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் ICDP (உள்ளக இணைப்பு  அபிவிருத்தி) திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி செய்யப்படாது புறக்கணிக்கப்பட்டிருந்த  பல மிக முக்கிய வீதிகள் காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும் முன்னாயத்த பணிகள் யாவும் நிறைவுற்று தற்போது கொழும்பு ICDP திட்ட அலுவலகத்தினால் தேசிய மட்ட கேள்வி கோரப்பட்டு வீதிகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்னும் இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளது.

அபிவிருத்தி செய்யப்பட உள்ள வீதிகளில் விபரம்

டீன்வீதி :

(2.1 KM  உத்தேச மதிப்பீடு 17கோடி 80இலட்சம்)  பிரதான வீதியில் தொடங்கி கடற்கரையை அடைந்து கடலோர வீதியூடாக சென்று கடற்கரை கான்கிரீட் வீதியில் முடிவுறும்

  1. பாலமுனை கர்பலா காத்தான்குடி இணைப்பு வீதி :

(2.2 KM உத்தேச  மதிப்பீடு 13கோடி 80இலட்சம்) தீன் வீதி அலியார் சந்தையில் தொடங்கி பாலமுனை பிரதான வீதி சந்தியை அடையும்

  1. அல் அக்ஸா ( முகைதீன் பள்ளிவாயல் வீதி) :

    NA 2

(2.75 KM உத்தேச மதிப்பீடு13 கோடி 20இலட்சம்) அல் அக்ஸா பள்ளிவாயலில் தொடங்கி பதுரியா வீதியூடாக சென்று முதியோர் இல்ல வீதியை அடைந்து அங்கிருந்து மஞ்சந் தொடுவாய் புதிய பாலமுனை வீதியூடாக  பூநொச்சிமுயை அடைந்து அங்கிருந்து பூநொச்சிமுனை சுனாமி (பச்சை வீடு) வீட்டு திட்ட வீதியில் நிறைவுறும்

  1. CTB வீதி மற்றும் பெண் சந்தை வீதி (1.1KM உத்தேச  மதிப்பீடு 5கோடி 10இலட்சம்) பெண் சந்தை வீதிஇ இரண்டாம் குறுக்கு வீதிஇ சிடிபி டிப்போ பின்னால் செல்லும் மையவாடி வீதி என்பன உள்ளடங்கும்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி