1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாறுக் ஷிஹான்
-----------------------

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான

மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட சிசிரிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய 4 சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கடந்த தவணைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப் பொருட்களை அழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் மன்றில் ஆஜராகி இருந்தனர்.பின்னர் இரு தரப்பினரின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயது மதிக்கத்தக்க 4 சந்தேக நபர்களை பிணையில் விடுவித்தல் தொடர்பாக சமர்ப்பணம் மற்றும் குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை ,மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல் நீடிக்கபட்டு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆந் திகதி வரை வழக்கினை ஒத்தி வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடத்தப்படும் மத்ரஸா ஒன்றில் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (13) எனும் கல்வி கற்று வந்த மாணவனே தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

மத்ரஸாவில் மஹ்ரிப் தொழுகைக்கு ஏனைய மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் மரணமடைந்த மாணவன் அங்கு காணப்படாததன் காரணமாக சில மாணவர்கள் தேடிய நிலையில் மலசல கூடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அந்த மாணவன் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் உறுதி செய்திருந்தது.

இதே வேளை மரணமடைந்த மாணவனின் பெற்றோர் உறவினர்கள் தூக்கில் தொங்குவதற்கு எமது பிள்ளை கோழையல்ல எனவும் ஏதோ ஒன்று நடைபெற்றுள்ளதை ஊகிக்க முடிவதாகவும் முறையான விசாரணை அவசியம் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகியபோது மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸாரால் சந்தேகத்தின் போரில் மதரஸா நிர்வாகியாகியான மௌலவி கைது செய்யப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி