1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக்காலம்

மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்து கட்சியின் கருத்து அல்ல என அக்கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் கண்டிப்பாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் நடத்தப்படும் என்றும் அந்தத் தேர்தலில் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவார் என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார நேற்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பொருளாதார சீர்திருத்தம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய நன்கொடையாளர்களுடன் அரசாங்கம் உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்தச் செயற்பாடு வெற்றியடைய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது எனவும் ரங்க பண்டார மேலும் தெரிவித்திருந்தார்.


Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி