1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று (31) நள்ளிரவு முதல்

அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்  எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 355 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு புதிய விலை 317 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.
 
மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபா என அறிவித்துள்ளது.
 
இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி