1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள்

மற்றும் தனிநபர்களால் நடத்தப்படும் போலியான ஊடக கற்கை நெறிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தற்போது அதிகரித்து வரும் போலியான ஊடக கற்கை நெறிகள் மற்றும் கருத்தரங்குகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கவனத்துக்கு  கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
"இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து இவ்வாறான போலி ஊடக கற்கை நெறிகள் தற்போது நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் அவதானிக்கிறோம். 
 
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் பெயரிலும் ஊடகங்கள் மூலம் பிரபல்யம் வாய்ந்த சில தனிநபர்களின் பெயர்களிலும் முன்னெடுக்கப்படும் இக்கற்கை நெறிகள் மூலம் நூற்றுக் கணக்கான தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக எமது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
சில இடங்களில் இலவசம் என்று விளம்பரப்படுத்தி பின்னர் மோசடியான முறையில் கட்டணம் அறவிடப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 
 
அது மாத்திரமல்லாமல், இலங்கையிலுள்ள முன்னணி ஊடக நிறுவனங்களில் தொழில் பெற்றுத் தரப்படும் என்ற உறுதிமொழியும் இந்த போலி ஊடக கற்கை நெறிகளின் போது வழங்கப்படுகின்றது. 
 
எனினும் அவ்வாறான தொழில்களோ அல்லது சான்றிதழோ கூட வழங்கப்படாமல் பல இளைஞர்கள் நடுத் தெருவில் கைவிடப்பட்ட விடயமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் இளைஞர் யுவதிகள் மற்றும் பெற்றோர் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றோம். 
 
இன்று பாடசாலைக் கல்வித் திட்டத்தில் உயர் தரத்தில் ஊடக கல்வி ஒரு பாடமாக உள்ள வாங்கப்பட்டுள்ளமையினால், ஊடகத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்கள் அதனைத் தொடர முடியும். 
 
இதன் மூலம், களனி பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் ஆகியவற்றில் இளமானி கற்கை நெறிக்காக நுழைய முடியும்.
 
இதற்கு மேலதிகமாக கொழும்பு பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தென் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ் மொழி மூலம் ஊடகத் துறையில் டிப்ளோமா கற்கை நெறிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 
 
இவ்வாறான கற்கை நெறிகளை மேற்கொள்வதன் மூலம் தங்களின் கல்வித் தரத்தினை அதிகரிப்பதுடன், பல்வேறு பயிற்சிகளையும் பெற முடியும். இதற்கு மேலதிகமாக இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் முன்னெடுக்கப்படும் ஊடக கருத்தரங்குகள் மற்றும் கற்கை நெறிகளையும் இளைஞர் யுவதிகள் தொடர முடியும்.
 
அந்த வகையில் ஓர் ஊடகப் பயிற்சி நெறியினை தெரிவுசெய்ய முன்னர் அப்பயிற்சி நெறியை நடாத்தும் நிறுவனத்தின் நம்பகத்தன்மை, அதன் வளவாளர்களின் தகைமை, கற்கைநெறியின் பெறுமதி தொடர்பில் நன்கு ஆராயுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
 
இது விடயத்தில் மேலதிக வழிகாட்டல்கள் தேவைப்படின் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மின்னஞ்சல் முகவரியான This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி