1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(நூருல் ஹுதா உமர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்
தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் கடந்த மே 8 ஆம் திகதி பலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும்  ரபா பிரதேசத்தில் இஸ்ரேலிய இராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் தொடர்பிலும் கண்டித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எகிப்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
 
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு மீது இடி விழுந்து சாக வேண்டும் என்றும் கூறியிருந்த அவர் “இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யா­கு­வையும் அந்­நாட்டின் கொடுங்கோல் இரா­ணு­வத்­தையும் கட்­டுப்­ப­டுத்த முடி­யாமல் பக்­கத்தில் உள்ள எகிப்து ஜனா­தி­பதி நாட­க­மாடிக் கொண்­டி­ருக்­கிறார்.
 
பலஸ்­தீன மக்­களைப் பலி கொடுப்­ப­தற்­காக ரபா எல்லைப் பிர­தேசம் இஸ்­ரே­லிய இரா­ணு­வத்­துக்காக திறந்­து­ வி­டப்­பட்­டி­ருக்­கிறது  எனவும் கூறியிருந்தார்.
 
இதுதொடர்பில் இலங்கையிலுள்ள எகிப்து தூதரகம் பலஸ்தீன தூதரகம் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் உரை தொடர்பில் தமது நிலைப்பாட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.
 
பலஸ்­தீன விட­யத்தில் எகிப்து சர்­வ­தேச அரங்­கிலும் உள்­நாட்­டிலும் தேவை­யான அனைத்துவழி­க­ளிலும் பல உத­வி­களை தொடர்ச்­சி­யாக வழங்கி வரு­வதாகவும் ஹரீஸ் எம்.பியின் இந்த உரை காரணமாக சர்வதேச மட்டத்தில் எகிப்தை பிழையான கண்ணோட்டத்தில் நோக்குவதாகவும் இதனால் பல்வேறு இக்கட்டான நிலைகள் தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
 
எகிப்து பலஸ்தீனுக்கு வழங்கும் ஆதரவு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு இந்த விடயத்தை தெளிவுபடுத்துமாறும் தெரிவித்து இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி. ஸுஹைர் எம். எச். டார் செயிட் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி