1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின்

பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட  இலங்கையைச் சேர்ந்த நான்கு பேரும் போதைப்பொருளுக்கு  அடிமையானவர்கள் என்றும் அவர்கள் மத தீவிரவாதிகள் அல்லர் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம்  இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்   இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் புலனாய்வு அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு கண் வைத்திருக்கிறது.  இந்தியா சென்ற நான்கு பேரிடம் விரிவான விசாரணை நடந்து வருகிறது, அவர்களது சகாக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நடந்து கொண்டிருக்கும் விசாரணை குறித்து என்னால் கருத்துக் கூற முடியாது. எனினும், கைது செய்யப்பட்ட நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள், மதவெறியர்கள் அல்ல. அப்படி எந்தத் தொடர்பும் இல்லை.

எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்கிறோம் என்பதனை பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் என்னால் மக்களுக்கு உறுதியளிக்க முடியும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடக்கா...

எவ்வாறாயினும், இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட உளவுத்துறையின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி