1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் தேர்தலகளை

இலக்காகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி  புதிய குழுவொன்ற  நேற்று (02) நியமித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தேர்தல் அமைப்பாளராக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதுடன் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கட்சியின் தேர்தல் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா கட்சியின் தேர்தல் பிரதிப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர, ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகிகள் குழுவில் சிறிய மாற்றம் செய்யப்பட்டு பிரோஸ் பாரூக் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராகவும் பொருளாளராக இருந்த மிஸ்பா சத்தார் உப தலைவராகவும் கிரிஷான் தியோடர் துணைப் பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளர் ருவான் விஜயவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தவிசாளர்  வஜிர அபேவர்தன, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் உள்ளிடவர்கள் அதே பதவிகளை தொடர்ந்தும் வகிக்கும செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி