1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின்போது

ஏற்பட்ட வாக்குவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்க்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று  (03) மாலை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அங்கு கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்க்ஷவுக்கும் மஹிந்தானந்த அளுத்கவுக்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது பொலன்னறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு இவர்களுக்கிடையிலான வாக்குவாதத்தை சமரசம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூட்டத்தின் முடிவில் மஹிந்தானந்த அளுத்கம எம்.பி.க்கும் குணதிலக்க ராஜக்பக்ஷவுக்கும் இடையில் படிக்கட்டில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது மஹிந்தானந்த எம்பி  குணதிலக்க ராஜபக்க்ஷவை  தள்ள முற்பட்டபோது குணதிலக்க ராஜபக்க்ஷ  மாடிப்படியில் வீழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள்  தெரிவித்துள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி