1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ராஜகிரிய, ரோயல் பார்க்

கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் சமந்த ஜயமஹா என்ற பிரதிவாதிக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குறித்த பிரதிவாதியை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், மனுதாரருக்கு மைத்திரிபால சிறிசேன 10 இலட்சம் ரூபா  இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் மற்றும் தந்தைக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளதாகத் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை உள்நாட்டு மற்றும் சர்வதேச சாசனங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு அழைத்துவர தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி