1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பரிசுப் பொருட்களைத் தருவதாகக் கூறி பல்வேறு

தரப்பிரை ஏமாற்றிய பெண் சந்தேக நபருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (6) நீதிமன்றத்தில் 22 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெஹிவளையில் வசிக்கும் பத்தினி குட்டிகே ஜூட் லுக்சிகா நோனிஸ் என்பவருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தனித்தனியாக 22 வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.

இந்தச்  சந்தேக நபர் சுமார் 7 வருடங்களாக சமூக வலைதளங்கள் மூலம் இவ்வாறு மோசடிகளை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் மக்களிடமிருந்து  பல இலட்சம் ரூபாக்களை  மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் செய்ததாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி