1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் கட்சிக்குள் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க கொழும்பில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

ஆனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்வது என்பது தொடர்பில் கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது சகல விடயங்களையும் பூர்த்தி செய்துள்ளதாக தெரிவித்த  அவர், கிராம மட்டத்தில் இருந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தி எதிர்வரும் தேர்தலுக்கு தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
 
பல கூட்டணிகள் உருவாகி வருவதாகவும் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி உருவானது என்றும் திஸாநாயக்க தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
 
கட்சியின் மத்திய குழு கூட்டப்பட்டு புதியவர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதில் தலைவராக செயற்படுவார் எனவும் அவர் தெரிவித்தார்.
 
கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே செயலாளர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி