1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நூருல் ஹுதா உமர்  

கல்விசார் நியமனங்களிலும், கல்வி அதிகாரிகள்

நியமனங்களிலும் பல பாரபட்சங்கள் இடம்பெறுவதாக அறிகிறோம். இது போன்று பல இடங்களிலும் பல்வேறு அசௌகரியங்கள், பாரபட்சங்கள் இடம்பெறுகின்றன.. 

எமது நாட்டிலுள்ள தமிழ் பேசும் மக்கள் அவற்றை மேன்முறையீடு செய்யவும்  விரைவான தீர்வுகளை பெறவும் "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ அரசியலமைப்பு ரீதியாக ஏற்பாட்டை செய்ய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான  எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் கேட்டுக்கொண்டார்.

 பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரை யாற்றிய அவர்,

இப்படியான ஏற்பாடுகள் இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளன. எமது நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் நலன் கருதி "சிறுபான்மை இன நலன் ஆணைக்குழு" ஒன்றை நிறுவ பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முன்வர வேண்டும். .மேலும், மிக நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பொத்துவிலுக்கான தனியான கல்வி வலயத்தை உருவாக்கித் தருமாறும் கேட்டுக்கொண்டார்.

அமைச்சரவை அனுமதியுடன் மாகாண சபைகளினூடாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வரும் கல்வி அமைச்சு கிழக்கு மாகாணத்தில் கஷ்டப் பிரதேசங்களில் உள்ள ஆசிரிய வெற்றிடங்களையும் நிரப்ப  நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அந்தத் தேவையை பூர்த்தி செய்ய அண்மையில் கிழக்கு மாகாண சபை நடவடிக்கை எடுத்திருந்ததும் துரதிஷ்டமாக அந்த நியமனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கூடுதலான ஆசிரியர்களை கிழக்கு மாகாண பாடசாலைகளில் நியமிக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி