1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்த நாட்டில் முதியோர் எண்ணிக்கை

வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்டில் பிறக்கும்போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட விசேட வைத்தியர் டாக்டர் பாலித மஹிபால இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
 
“நமது நாட்டில் முதியோர் சனத்தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஆசியாவிலேயே அதிவேகமாக முதியோர்களை கொண்ட நாடு இலங்கை. 
 
நமது நாட்டில் பிறக்கும் போது ஆயுட்காலம் 79.7 சத வீதமாகவும் புதிய  மதிப்பீட்டின்படி 83 சத வீதமாகவும் அதிகரித்துள்ளது.
 
 இதனால்தான் முதியோர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது என்றார்.
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபையின் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு வழமைக்கு திரும்பியுள்ளது எனக் கூறினார்
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி