1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றம் கலைக்கப்படும் திகதி

நெருங்கிவரும் நிலையில், பல எம்பிக்கள்  மீண்டும் பாராளுமன்றத்துக்கு செல்வதற்காக  பிரதான கட்சிகளிடமிருந்து வேட்பு மனுக்களை பெற்றுக் கொள்ளும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் எனவும் ஜனாதிபதித் தேர்தல்  முடிவடைந்தவுடன்  நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அனைத்து முக்கிய வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பொதுத் தேர்தலை நடத்த இன்னும் 114 நாட்களே உள்ளன.  இந்நிலையில், தற்போது சுயேச்சையாக செயற்பட்டு பல்வேறு குழுக்களில் இணைந்துள்ள  எம்.பி.க்கள் மீண்டும் பாராளுமன்றம் செல்வதற்காக இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன  ஆகியவற்றுடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளமை தெரிய வந்துள்ளது.  

இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர்  பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு   பாராளுமன்றத்துக்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர்களாவர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி