1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தலை ஒத்திவைப்பதற்கு இணங்கும் அனைத்து

அரசியல் கட்சிகளும் அழிந்து போகும்  என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒரு கதையும், செயலாளர் மற்றொரு கதையும் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே  அவர் இதனைத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்த  நாமல் ராஜபக்க்ஷ, தேர்தலை ஒத்திவைத்த கட்சிகளும் அரசாங்கங்களும் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தலை இரண்டு வருடங்கள் ஒத்திவைத்ததையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களுக்கு வீழ்ச்சியடைந்தது,  

பொதுஜன பெரமுனவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்  ஒருவர் இருந்தாலும், வேட்பாளர் யார் என்பது தற்போது அறிவிக்கப்படாது என்றும், நேரம் வரும்போது அறிவிக்கப்படும் என்றும்  அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி