1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்

அநுராதபுரம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் உத்திக பிரேமரத்னவின் வாகனத்தின் மீது பொலிஸ்  அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்  நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் இணைந்து திட்டமிட்ட வகையில் இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
 
துப்பாக்கிச் சூட்டில் காரின்  கண்ணாடி சேதமடைந்தது, ஆனால் எம்.பி.க்கு காயம் ஏற்படவில்லை.
 
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
 
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
சஞ்சீவ மஹாநாம என்ற சந்தேகத்துக்குரிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பொலிஸாருக்கு தெரியப்படுத்தி உரிய அனுமதி பெற்று வெளிநாடு செல்லவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் தனியான விசாரணை நடத்தப்படும் எனவும் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
 
உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும் பாராளுமன்ற உறுப்பினரும் நன்கு நெருக்கமானவர்கள் என்பதாலேயே இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டதாகத் தோன்றுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
விசாரணையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மனைவி மற்றும் பிள்ளைகளும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சந்தேகத நபரான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை ஒருவரிடம் ஒப்படைத்து பணியிடத்துக்கு அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளதாகத் தெரிவித்த திதல்துவ, இது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
 
உதவி பொலிஸ் அத்தியட்சகர் நேற்றைய தினம் மலேசியாவுக்கு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு சென்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி