1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை

நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படும் என தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த மனு நாளை  மறுதினம் திங்கட்கிழமை (15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, மற்றும் அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
 
சட்டத்தரணி அருண லக்சிறி உனவதுனவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முறையான முறையில் நிறைவேற்றப்படாததால், அதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு அனுப்பி, அதற்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படும் என தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி