1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவின்

நடைபெற்ற தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது , ​​முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  பாதுகாப்பு அதிகாரிகளின் அலட்சியத்தினாலேயே சுடப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

பேரணியில் டிரம்ப் உரையாற்றும் போது , ​​400 அடி தூரத்தில் உள்ள உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறி துப்பாக்கியால் சுட்ட  துப்பாக்கிதாரியை பார்த்த பேரணியில் பங்கேற்றவர்களில் ஒருவர் , டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பில் கூறிய போதும் அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கிரெக் என்ற ட்ரம்ப் ஆதரவாளர் பிபிசி செய்தியாளர்களிடம் தான் பார்த்ததை பாதுகாப்பு படையினருக்கு தெரிவித்ததாக கூறினார் .

' கூரையில் யாரோ ஏறுவதைக் கண்டேன் . அதை பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினேன் . ஆனால் அவர்கள் என்னைப் பற்றி கவலைப்படவில்லை . "திடீரென்று துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது " என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி