1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

டிபென்டரில் இளைஞரை கடத்திச்

சென்று அநியாயமாக தடுத்து வைத்து தாக்கியமை உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிணை வழங்கப்படுமா? 

இது குறித்த தீர்ப்பு எதிர்வரும் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா நேற்று (15) தெரிவித்துள்ளார்.
 
சிறைத்தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பை அறிவிக்கும்வரை தம்மை பிணையில் விடுவிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ ஊடாக ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றத்திடம் கோரினார்.
 
சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார பிணை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.
 
மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கின் விசாரணையை தினசரி அடிப்படையில் சட்டமா அதிபர் ஆதரிக்க முடியும் என்றும் கடந்த காலத்தைப் போன்று மூன்று வருட சிறைத்தண்டனைக்கு எதிரான மேன்முறையீட்டை விசாரிப்பதற்கு அதிக காலம் எடுக்காது என்றும்  பண்டார சுட்டிக்காட்டினார்.
 
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்து பிணைமனு மீதான முடிவு எதிர்வரும் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
 
2015ஆம் ஆண்டு தெமட்டகொடவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றிய அமில பிரியங்கா என்ற இளைஞரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் பேம சந்திராவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி