1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுரேந்திர வசந்த பெரேரா என

அழைக்கப்படும் கிளப் வசந்தவின் சடலத்தை வைத்திருக்க வேண்டாம் என மலர்ச்சாலைக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட அழைப்பானது மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் கொழும்பில் உள்ள தனியார் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சிம் கார்ட் ஊடாக வந்துள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

எனினும் குறித்த மாணவர் அந்த சிம்மை பயன்படுத்துவதில்லை எனவும் அதனைப் பயன்படுத்தி அழைப்பை மேற்கொண்ட நபரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், அந்த அழைப்புகள் மூலம் விசாரணையை தவறாக வழிநடத்தும் முயற்சி நடந்துள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
 
இதேவேளை,  கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடமான நிலையில் களுபோவில போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி