1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத்

பதியுதீனுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையில்  கடந்த வாரம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது . 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்குச் சென்றபோது ரிஷாத் பதியுதீன் ரணிலுடன் காணப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
 
இதனையடுத்து, ரிஷாத்தின் ஆதரவு ஜனாதிபதி ரணிலுக்கே என ஊடகங்கள்  ஊடகங்கள் சில யூகம் வெளியிட்டிருந்தன்
 
எவ்வாறாயினும், கடந்த வாரம் சஜித் பிரேமதாச மன்னாருக்கு விஜயம் செய்தபோது, ​​சஜித்துடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் ரிஷாத்  பங்குபற்றியதை காணமுடிந்தது.
 
எவ்வாறாயினும், இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில், தற்போதைய அரசியல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து ரிஷாதிடம் கேட்கப்பட்டது . 
 
ஜனாதிபதி தேர்தலில் சஜித் முன்னிலை வகிக்கிறார் என்ற வாதத்திற்கு இடமில்லை என ரிஷாத் இங்கு தெரிவித்தார் . சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகரிடம் ரிஷாத் தெரிவித்தார் .
 
அதன் பின்னர் இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ரிஷாத்திடம் உங்கள் ஆதரவு எந்த வேட்பாளருக்குக் கிடைக்கும் என கேட்டார் . 
 
தயக்கமின்றி பதிலளித்த ரிஷாத் இது தொடர்பான தீர்மானம் ஏற்கனவே கட்சியினால் எடுக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானித்துள்ளதனை சுட்டிக்காட்டினார்.
 
இது தொடர்பில் பல காரணங்களை இந்திய உயர்ஸ்தானிகரிடம் ரிஷாத் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
 
இவ்வாறே ஒரு வாரத்துக்கு முன்னர் ரவூப் ஹக்கீமையும் இந்திய உயர்ஸ்தானிகர் அழைத்து  இதே கேள்வியைக் கேட்டபோது ஹக்கீமும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு ரிஷாத் கூறிய அதே பதிலையே வழங்கியுள்ளார்.
 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி