1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாடசாலையில் எனது மகளுக்கு

திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவர் மூளைச்சாவு அடைந்தமை தெரிய வந்தது. மகளுக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாது என விசேட மருத்துவர்கள் தெரிவித்தனர். உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்டனர். எனது மகளால் இன்னும் பல உயிர்கள் வாழ முடியும் என்பதை அறிந்த நானும் என் மனைவியும் மறுபடி யோசிக்காமல் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட உடலின் எந்தப் பாகத்தையும் தானம் செய்ய சம்மதம் தெரிவித்தோம்.'

இவ்வாறு திடீர் சுகவீனமடைந்து மூளைச்சாவடைந்த  மாணவி ஹாசினி ஹிருஷிகா இளங்கோன் (15) என்பவரின் தந்தையான ஐ.எம். இளங்கோன் தெரிவித்தார்.
 
கம்பளை, வெலிகல்ல கொடதெனியவை வசிப்பிடமாகக் கொண்ட ஹிருஷிகா, கொட்டகலொலுவ ஸ்ரீ ஜினரதன வித்தியாலயத்தில் ஒன்பதாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார். 
 
உடல் உறுப்புகளை தானம் செய்த ஹிருஷிகா, பாடசாலையில் மாணவர் தலைவராகவும் பாடசாலை சுற்றுச்சூழல் குழுவின் தலைவராகவும் இருந்தார். 
 
எனது  மகள் ஹிருஷிகா பாடசாலையில் சுயநினைவை இழந்துள்ளார். அப்போது அருகில் இருந்த மாணவி அவளைக் கீழே விழாமல் பிடித்துள்ளார்.  பின்னர் கொழும்பு ரிட்ஜ் சிறுவர் வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்தார். மகளின் மூளையில் ஒரு நரம்பு வெடித்து விட்டதாக மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
 
மகளின் மூளை செயலிழந்து விட்டதாகவும் அவரை இப்படியே வைத்திருக்க முடியாதென்றும் டாக்டர் குழுவினர் தெரிவித்தனர்.
 
மகளின் மரணம் குறித்து எங்கள் இதயத்தில் தாங்க முடியாத வேதனை உள்ளது. எங்கள் குடும்பத்தில் மூத்த மகள் இருக்கிறாள். ஹிருஷிகா எனது இரண்டாவது மகள். நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு அருகிலேயே ஹிருஷிகா அடக்கம் செய்யப்பட்டார். 
 
பேராதனை போதனா வைத்தியசாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மூளைச்சாவுற்ற உறுப்பு மீட்புப் பிரிவினால் ஹிருஷிகாவின் உறுப்புகள் எடுக்கப்பட்டதால் மேலும் பல உயிர்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டதாக இளங்கோன் மேலும் தெரிவித்தார். 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி