1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியல் விமர்சகர் விபுல கருணாதிலக

மற்றும் 'சமபிம' தலைவர் தீப்தி குமார குணரத்ன ஆகியோருடன் "ஐடியாஸ் ஃப்ரண்ட்" YouTube நிகழ்ச்சியில் கருத்துக் கணிப்புகள் தொடர்பில் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக ஊடகங்களில் மக்கள் கருத்துக் கணிப்புகள் பரவலாக வெளிவருவதாகவும் குறிப்பிட்ட மதிப்பின் அடிப்படையில் வேட்பாளர்களின் பிரபலத்தை செயற்கையாக சிதைத்து மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறான போலியான கணக்கெடுப்புகளினால் ஜனநாயகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தலை அவதானிக்கும் மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும் எனவும் விபுல கருணாதிலக்க மற்றும் தீப்தி குமார ஆகியோர் வலியுறுத்துகின்றனர். 

மேலும் கருத்துகளை முன்வைத்த அவர்கள், எமது நாட்டில் எந்தவொரு கருத்துக் கணிப்பு நிறுவனங்களும் சுதந்திரமாக செயற்படுவதில்லை எனவும் தேர்தலின்போது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு கட்சிக்காகவும் பலரும் செயற்படுவதாகவும்  தெரிவித்தனர். 

தீப்தி குமார் மற்றும் விபுல கருணாதிலக்க ஆகியோர் மேலும் கருத்து தெரிவித்த வீடியோவை கீழே காண்க.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி