1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களுக்கு மேலதிகமாக தண்ணீரை ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் அதிக வௌிநாட்டுச் செலாவணியை பெற முடியுமென்பதால், தண்ணீரை ஏற்றுமதி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

ஜப்பானும் பிரான்ஸும் ஏற்கனவே உலக வர்த்தக சந்தைக்கு தண்ணீரை வழங்கி பெருமளவு வருமானத்தை பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான நுவரெலியா ஹோப் தோட்டத்தில் நீர்க்குமிழ் சம்பந்தமாக ஹன்தான அடிப்படை கல்வி நிறுவனத்தின் பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆய்வறிக்கையை வௌியிடும் நிகழ்வில் 20ம் திகதி உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பேராசிரியர்களான சமன் செனவீர, ரொஹான் வீரசூரிய, அத்துல சேனாரத்ன, லக்மால் ஜயரத்ன ஆகியோர் மேற்கொண்ட இந்த ஆய்வின் மூலம் ஹோப் தோட்டத்திற்குரிய நீர்க்குமிழின் நீரை சுத்திகரிக்காமல் அருந்த முடியுமென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர், வர்த்தகத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொறுப்பு தனக்கிருப்பதாகவும், வர்த்தகச் சந்தையை பன்முகப்படுத்துவதன் மூலம் மேற்கு ஐரோப்பாவின் பக்கம் திரும்பியுள்ள சந்தையை ஆபிரிக்க, ஆசிய பிராந்தியங்களுக்கு திருப்ப வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி