1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்குபெற்ற பெண்களின் படத்தை பிரபல அமெரிக்க இதழான டைம் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

டெல்லியின் எல்லை பகுதியான திக்ரி, காஜிபூர், சிங்கு எல்லைகளில் டிராக்டர்களை வீடுகளாக மாற்றி தங்கி போராட்டத்தில் இருந்து பின் வாங்காமல் கடும், குளிர், மழை, வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்ட களத்தில் இருந்து திரும்புவோம் என்று விவசாயிகள்  கூறி வருகின்றனர்.  ஆங்காங்கா இருந்தபடியே சமைத்து சாப்பிட்டு போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது. போராட்டக் களத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல அமெரிக்க இதழான டைம் பத்திரிகையின் மார்ச் மாதத்திற்கான இதழின் அட்டைப்படத்தில் டெல்லி திக்ரி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் படம் இடம்பெற்றுள்ளது. விவசாயிகள் போராட்டத்தின் முன்னணி வீரர்கள் என குறிப்பிடப்பட்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் பெண்கள் பங்குபெற வேண்டாம் என்கிற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களைக் குறித்து டைம் இதழ் இந்த அட்டைப்படத்தை வெளியிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி