1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவு பொருட்களிலும் புற்று நோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார்.

அந்த உணவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை. இது மேலும் அச்சத்திற்கு காரணமாகியது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மிக்க இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருவதாக எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஹிருணிகா பிரேமசந்திர மேலும் கூறுகையில்,

கொவிட் தொற்றின் காரணமாக கடந்த வருடம் தமிழ் - சிங்கள புத்தாண்டை நாட்டு மக்களுக்கு கொண்டாட முடியாமல் போனது.

எனினும் இந்த ஆண்டு புற்றுநோய் மூலக்கூறுகள் அடங்கிய எண்ணெய் இறக்குமதி அச்சத்தில் மக்களால் புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத சூழல் ஏற்பட்டது. இலங்கை தர நிர்ணய கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் மேலும் சில உணவு பொருட்களிலும் புற்று நோய் மூலக்கூறுகள் இருப்பதாகக் கூறினார்.

அந்த உணவுகள் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வில்லை. இது மேலும் அச்சத்திற்கு காரணமாகியது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மிக்க இந்த விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அரசாங்கத்தை கோருகின்றோம்.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக சகல அதிகாரங்களையும் தன்னகப்படுத்தியுள்ள அவர் இது தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்துவதில் ஏன் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியாது ? யுத்தம் மற்றும் தீவிரவாத செயற்பாடுகளை விடவும் அச்சுறுத்தலான நிலைமையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே தேங்காய் எண்ணெய் தவிர வேறு எந்த உணவு பொருட்களில் புற்றுநோய் மூலக்கூறுகள் உள்ளன என்பதை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி