1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

2005ஆம் ஆண்டு கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்ம ரட்ணம் சிவராமின் 16 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மட்டு ஊடக அமையத்தில் ஏப்ரல் 29ஆம் திகதி (இன்று) நடைபெற்றது.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் அவர்களுக்கு மலர் மாலை அணிவித்து ஈகை சுடர் ஏற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

தராகி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட தர்மரட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த நினைவு தின நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் முன்னால் நா.ம.உறுப்பினர் பா.அரியநேந்திரன் , மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

2.jpg

1.jpg

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி